​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜனவரி முதல் வாரத்தில் டெல்லியில் அடர்த்தியான மூடுபனி நிலவும் - வானிலை மையம்

Published : Jan 01, 2024 1:01 PM

ஜனவரி முதல் வாரத்தில் டெல்லியில் அடர்த்தியான மூடுபனி நிலவும் - வானிலை மையம்

Jan 01, 2024 1:01 PM

டெல்லியில் ஜனவரி முதல் வாரத்தில் அடர்த்தியான மூடுபனி நிலவும் எனவும், வெப்பநிலை 8 டிகிரி முதல் 9 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கும் எனவும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடுங்குளிரில் இருந்து தப்பிக்க தீ மூட்டி குளிர்காய்வதாகவும், இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சாலையோர மக்கள் தெரிவித்துள்ளனர். பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தர பிரதேசம், பிகார் உள்ளிட்ட வடமாநிலங்களின் மேல் அடர்த்தியான பனிப்படலம் நிலவுவதாக, அது தொடர்பான செயற்கைக்கோள் படத்தை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

அடர்த்தியான பனிமூட்டத்தால் பார்வை தூரம் குறைவாக உள்ளதால், வட மாநிலங்களில் பல ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.