இனிதே பிறந்தது 2024 புத்தாண்டு.. ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக் கூறி உற்சாகம்..!!
Published : Jan 01, 2024 6:55 AM
இனிதே பிறந்தது 2024 புத்தாண்டு.. ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக் கூறி உற்சாகம்..!!
Jan 01, 2024 6:55 AM
2024 ஆங்கிலப் புத்தாண்டு இனிதே பிறந்துள்ளது. புத்தாண்டை வரவேற்கும் விதமாக நள்ளிரவில் பொது இடங்களில் ஆட்டம் பாட்டம் களைகட்டியது..
2023ம் ஆண்டு விடைபெற்று, நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்தது. புதிய எதிர்பார்ப்புகளோடு புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
புத்தாண்டு பிறந்ததும் சென்னை மெரினா கடற்கரையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் ஹேப்பி நியூ இயர் என உற்சாக முழக்கமிட்டனர். ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
சென்னை பெசன்ட் நகர், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களிலும் திரளான பொதுமக்கள் திரண்டு வந்து புத்தாண்டு முழக்கங்களை எழுப்பினர்..
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டுகள், சென்னையில் உள்ள வணிக வளாகங்களில் புத்தாண்டையொட்டி இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
திருச்சி, மதுரை, நெல்லை, சேலம், ராமேஸ்வரம், கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டின..
புதுச்சேரி கடற்கரையில் திரண்ட சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் நள்ளிரவு 12 மணிக்கு ஹேப்பி நியூஇயர் எனக்கூறி உற்சாக முக்கமிட்டனர்.
புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் முன் திரண்ட பக்தர்கள் நள்ளிரவில் புத்தாண்டு சிறப்பு மனமுருக வேண்டினர்.
சென்னை சாந்தோம், பெசன்ட் நகர் மற்றும் வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டையொட்டி நள்ளிரவில் சிறப்புப் பிரார்த்தனைகளும் திருப்பலியும் நடைபெற்றன.
புத்தாண்டு பிறந்ததும் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தொலைபேசியிலும் நேரிலும் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.