​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிளாம்பாக்கம் பேருந்து முனைய பராமரிப்பில் பொதுமக்களுக்கும் பங்கு உண்டு: புதிய பேருந்து முனையத்துக்கு முதல் நாள் வந்த பயணிகள் கருத்து

Published : Dec 31, 2023 5:15 PM

கிளாம்பாக்கம் பேருந்து முனைய பராமரிப்பில் பொதுமக்களுக்கும் பங்கு உண்டு: புதிய பேருந்து முனையத்துக்கு முதல் நாள் வந்த பயணிகள் கருத்து

Dec 31, 2023 5:15 PM

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் பிரமாண்டமாகவும் அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளதாக முதல் நாள் பயணம் செய்ய வந்த பயணிகள் தெரிவித்தனர்.

பல்வேறு வசதிகளுடன் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை சனிக்கிழமை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பதாகைகள், எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இருப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.

பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பேருந்து முனையத்தை சுத்தமாகவும் சேதப்படுத்தாமலும் பராமரிக்க மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என அங்கு வந்த பயணிகள் தெரிவித்தனர்.