உக்ரைனில் 120-க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் ரஷ்யா வான்வழித் தாக்குதல் நடத்தியதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளதாகவும் அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
காணொளி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், தாக்குதல் நடைபெற்ற பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
உக்ரைன் மீது 158 ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் ரஷ்யா நாள் முழுவதும் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் ஏராளமான வீடுகள் மற்றும் குடியிருப்புகள் சேதமடைந்ததாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் போர் தொடங்கிய பிறகு ரஷ்யா நடத்தியுள்ள மிக மோசமான வான்வழித் தாக்குதல் இது என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.