சீனாவில் புத்தாண்டு விடுமுறையின் முதல் நாளில் 4 கோடிக்கும் அதிகமானோர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இது கடந்த ஆண்டைவிட 73 சதவீதம் அதிகம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில்கள் மூலம் 1.6 கோடி பேரும், வாகனங்கள் மூலம் 2.3 கோடி பேரும், விமானங்கள் மூலம் 18 லட்சம் பேரும், படகுகள் மூலம் 6 லட்சம் பேரும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவும் பனிமூட்டமும் காணப்படுவதால், காலதாமத்தைத் தவிர்க்க விமானங்களைவிட ரயில்களில் அதிகம் பேர் பயணம் மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.