தமிழ்நாட்டில் ஜன.2ல் ரூ.19,850 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
ரூ.1,100 கோடியில் திருச்சி விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
சேலம் - மேட்டூர் இடையே 41 கி.மீ. தூர இரட்டை ரயில் பாதையை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்
திருச்சி - விருதுநகர், விருதுநகர் - தென்காசி, செங்கோட்டை - திருச்செந்தூர் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையை தொடங்கி வைக்கிறார்
39 கிலோ மீட்டர் தூர திருச்சி - கல்லகம் 4 வழிச்சாலையை பிரதமர் திறந்து வைக்கிறார்
செட்டிக்குளம் - நத்தம் 4 வழிச்சாலை, காரைக்குடி - ராமநாதபுரம் இருவழிச்சாலையும் திறக்கப்படுகிறது
44 கிலோ மீட்டர் தூர சேலம் - வாணியம்பாடி 4 வழிச்சாலையையும் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்
முங்கையூர் - மரக்காணம் 4 வழிச்சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்
இந்தியன் ஆயில் கார்ப்பரேசனின் 488 கி.மீ. நீள இயற்கை எரிவாயு குழாயை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்