மும்பைத் தாக்குதல் வழக்கின் முக்கியக் குற்றவாளியான ஹபீஸ் சையத்தை ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தியுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு அமைச்சகத் தொடர்பாளர் அரிந்தம் பாக்ச்சி, ஐநா சபையால் சர்வதேச தீவிரவாதி என்று முத்திரையிடப்பட்ட ஹபீஸ் சையத் இந்தியாவில் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக இருப்பதாக தெரிவித்தார்.
ஆனால், இக்கோரிக்கையை நிராகரித்து விட்ட பாகிஸ்தான் இரு நாடுகளிடையே அதற்கான ஒப்பந்தம் ஏதும் இல்லை என்று பதிலளித்துள்ளது