​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சொகுசு ரயில் அம்ரித் பாரத் சேவையை புதுடெல்லியில் டிச30ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

Published : Dec 28, 2023 6:54 AM

சொகுசு ரயில் அம்ரித் பாரத் சேவையை புதுடெல்லியில் டிச30ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

Dec 28, 2023 6:54 AM

அம்ரித் பாரத் விரைவு ரயிலை பிரதமர் மோடி புதுடெல்லி ரயில் நிலையத்தில் இருந்து நாளை மறுநாள் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.  வந்தே பாரத் அதிவிரைவு ரயில்கள் வரிசையில் அறிமுகமாகும் இந்த அம்ரித் பாரத் ரயில்கள் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கக்கூடியவையாகும்.

இருக்கை வசதி கொண்ட வந்தேபாரத் போலன்றி படுக்கை வசதி பெட்டிகளும்  இந்த ரயிலில் உள்ளன. சென்னை ஐசிஎப் ரயில்பெட்டித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 22 பெட்டிகளுடன் தலைநகரில் இருந்து அயோத்தி வரை மற்றும் பெங்களூரில் இருந்து மால்டா வரை என்று இரண்டு வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட உள்ளன.