​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சுனாமிப் பேரலை தாக்கிய 19வது ஆண்டு நினைவு தினம்.. சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு நினைவாக மலர் தூவி அஞ்சலி

Published : Dec 26, 2023 2:54 PM

சுனாமிப் பேரலை தாக்கிய 19வது ஆண்டு நினைவு தினம்.. சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு நினைவாக மலர் தூவி அஞ்சலி

Dec 26, 2023 2:54 PM

தமிழகத்தில் சுனாமி பேரலைத் தாக்கிய 19ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

சென்னை, நொச்சிக்குப்பம் கடற்கரையில் சுனாமி பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் சுனாமியில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

புனித அல்லேசியார் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு நினைவு திருப்பலியிலும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

கடலுர் மாவட்டம் சிங்காரத்தோப்பு கிராமத்தில் உள்ள சுனாமி நினைவுத் தூணிற்கு மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்திய பிறகு, தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் ஏராளமான பெண்கள் பேரணியாக வந்து கடற்கரையில் அஞ்சலி செலுத்தினர்.

 

தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரத்தில் உள்ள நாட்டுப்படகு மீன்பிடி துறைமுக கடற்கரையில் ஏராளமானோர் மலர்தூவி, பாலூற்றி பிரார்த்தனை செய்தனர்.

 

மேலும் தமிழகத்தில் திருவள்ளூர், நாகப்பட்டினம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் சுனாமி நினைவுதினத்தையொட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது.