இந்தோனேசிய நாட்டில் நிக்கல் தொழிற்சாலை ஒன்றில் நேரிட்ட பயங்கர வெடிவிபத்து 13 பேர் உயிரிழந்தனர்.
மின்சார வாகன பேட்டரி உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளான நிக்கல் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு, இந்தோனேசியா.
அந்நாட்டின் சுலாவெசி தீவில் சீன நிறுவனத்தின் நிதி உதவியுடன் செயல்பட்டு வரும் நிக்கல் தொழிற்சாலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.
தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த 13 ஊழியர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். 38 பேர் படுகாயமடைந்தனர்.
தொழிற்சாலையில் வழக்கமான பழுதுநீக்கும் பணியின்போது விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.