சென்னை எண்ணூர் அருகே கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரத்தில் படிந்துள்ள எண்ணெய் கழிவுகளை பிளாஸ்டிக் மஃகுகளில் அள்ளி அகற்றும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர்.
நெட்டுக்குப்பம் பகுதியில் முகாமிட்டுள்ள மீன்வளம், சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாடு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் களத்தில் இறங்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
மஃகுகளில் அள்ளியும், துணிகளில் நனைத்தும் எண்ணெய் கழிவுகளை அள்ளி படகுகளின் மீது வைக்கப்பட்ட பேரல்களில் அவர்கள் ஊற்றினர்.
சுவாசக் கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டாலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதால் கழிவுகளைத் தாங்களே அகற்றுவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.