கன்னியாகுமரி மாவட்டம் முன்சிறை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை, மாணவர் முன்னேற்ற சங்கத்தலைவி தாக்கிய புகார் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார்.
மாணவர் முன்னேற்ற சங்க தலைவி பென்சால் மற்றும் உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் மாணவிகள் கழிவறைக்கு செல்லும்போது பின்தொடர்ந்து வீடியோ எடுப்பதாக மாணவிகள் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கடந்த 7ஆம் தேதி இதே போன்று வீடியோ எடுக்கும்போது பென்சிலாவின் செல்போனை பிடுங்கி தலைமை ஆசிரியை வசந்தாமேரியிடம் கொடுத்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, வசந்தாமேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது மாணவிகளின் முன்னிலையிலேயே பென்சால் அவரை சரமாரியாக தாக்கி செல்போனை பிடுங்க முயற்சித்துள்ளார். பென்சால் தாக்கியது சிசிடிவி பதிவில் உறுதியான நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.