​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தந்தைக்கு சிகிச்சை அளித்த உபகரணங்களை சுத்தம் செய்த மகன்.. அரசு மருத்துவமனையில் அடுத்த அதிர்ச்சி

Published : Dec 12, 2023 5:41 PM

தந்தைக்கு சிகிச்சை அளித்த உபகரணங்களை சுத்தம் செய்த மகன்.. அரசு மருத்துவமனையில் அடுத்த அதிர்ச்சி

Dec 12, 2023 5:41 PM

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தனது தந்தைக்கு கட்டு கட்ட பயன்படுத்திய ரத்தம் தோய்ந்த கத்திரிக்கோல், கத்தி போன்ற மருத்துவ கருவிகளை 12 வயது சிறுவன் சுத்தம் செய்தததாக கூறப்படும் சம்பவம் பற்றி மருத்துவமனை டீன் தலைமையில் விசாரணை நடைபெற்றது.

சோட்டையன் தோப்பு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர் பவுல்ராஜின் கால் விரல் ஒன்று அண்மையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட நிலையில், அந்த கட்டை மாற்றியதற்கான கருவிகளை அவரது மகனே சுத்தம் செய்ததாக காணொளி ஒன்று வெளியானது.

இதுகுறித்து ஆய்வு செய்த பின் பேட்டியளித்த மருத்துவமனை டீன் சிவகுமார், இந்த சம்பவம் தவறுதலாக நடந்து விட்டது என்றும், இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது எனவும் தெரிவித்தார்.

தமது படுக்கை அருகே மருத்துவப் பணியாளர்கள் வைத்து விட்டு சென்ற ரத்தம் தோய்ந்த உபகரணங்களை தாம் தான் மகனை விட்டு சுத்தம் செய்ய சொன்னதாக பவுல்ராஜ் கூறினார்.