ஜம்மு காஷ்மீர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இருந்த குழப்பம், ஏமாற்றம், சோர்வு என்ற நிலையில் இருந்து மாறி வளர்ச்சி, ஜனநாயம், கண்ணியம் என்ற பாதையில் முன்னேறி வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பான கருத்துப்பதிவில், காஷ்மீரத்து மக்கள் வளர்ச்சியை விரும்புகிறார்கள் என்பதும், தங்கள் பலம் மற்றும் திறமையின் மூலம் இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்காற்ற விரும்புகிறார்கள் என்பதும் தமக்கு தெளிவாகத் தெரியும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
வன்முறை மற்றும் உறுதியற்ற வாழ்க்கையில் இருந்து விடுபட்டு தங்கள் குழந்தைகள் தரமான எதிர்காலத்தை பெற வேண்டும் என்பதே காஷ்மீர் மக்களின் விருப்பம் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், மக்களின் கவலைகளை புரிந்து கொள்ளுதல், அவர்களுக்கு ஆதரவாக செயல்படுதல் மற்றும் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்தல் என்ற மூன்று விஷயங்களை தமது அரசு பின்பற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.