போகிற போக்க பார்த்தால் கூடுதல் படகுகள் விடனும்னு கேட்க வச்சிருவாய்ங்க போலயே..! மாணவ மாணவிகள் பாடு திண்டாட்டம்
Published : Dec 11, 2023 10:36 PM
போகிற போக்க பார்த்தால் கூடுதல் படகுகள் விடனும்னு கேட்க வச்சிருவாய்ங்க போலயே..! மாணவ மாணவிகள் பாடு திண்டாட்டம்
Dec 11, 2023 10:36 PM
திருவள்ளூர் மாவட்டம் நசரத் பேட்டையில் யமுனா நகர், டிடிஆர் நகர் பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட தெருக்களில் 8 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வடியாமல் ஏரி போல் தேங்கி இருப்பதால் பள்ளிகளுக்கு மாணவர்கள் படகில் செல்வதாகவும் , ஒரே படகில் அதிக மாணவர்கள் ஏற்றிச்செல்லப்படுவதால், வெள்ள நீரை விரைந்து அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
எதோ ஏரியில் மாணவர்கள் எல்லாம் பிக்னிக் போகிறார்களோ என்று எண்ணிவிட வேண்டாம்..!
நம்ம சென்னைக்கு பக்கத்தில.. திருவள்ளூர் நசரத்பேட்டை அருகே உள்ள யமுனா நகர் மற்றும் டிடிஆர் நகர் பகுதிகளில் 8 நாட்களாக வடியாத வெள்ளத்தில்... படகுகள் மூலம் மாணவர்கள் பள்ளிக்கு அழைத்துச்செல்லப்படும் காட்சிகள் தான் இவை..!
கனமழையால் 30க்கும் மேற்பட்ட தெருக்களில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து டிவி ஃப்ரிட்ஜ் வாஷிங் மெஷின் மின்சாதன பொருட்கள் என அனைத்து பொருட்களும் சேதம் ஆகி உள்ள நிலையில் அப்பகுதி சேர்ந்த மக்கள் மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்
மழை நின்று எட்டு நாட்களாக தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மோட்டார்கள் வைத்து தண்ணீர் வெளியேற்றும் பணியானது நடைபெற்று வருகிறது இருப்பினும் இடுப்பளவு தண்ணீர் இருந்து வருவதால் அப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பெறும் அவதி உற்று வருகின்றனர்.
இப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், இங்கிருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வருகின்றனர் மாணவர்கள் தற்போது படகுகளில் பயணித்து பள்ளிக்கு செல்லும் நிலையானது ஏற்பட்டுள்ளது.
திங்கட்கிழமை காலையில் படகுகள் மூலம் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் பள்ளி முடிந்து தற்போது மீண்டும் படகுகள் மூலம் வீடுகளுக்கு செல்கின்றனர் .
கடந்த இரண்டு தினங்களாக மட்டுமே அரசு படகு ஒன்றை வைத்து இயக்கி வரும் நிலையில் அளவுக்கு அதிகமானோரை படகில் ஏற்றிச்செல்வதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. விரைந்து தண்ணீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதுவரை கூடுதலாக அப்பகுதியில் படகுகள் இயக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் பொது மக்களை பத்திரமாக அழைத்துச் செல்ல அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி மாணவர்களும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீரில் கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதால் அப்பகுதியில் தற்போது மருத்துவ முகாம்களும் நடைபெற்று வருகிறது.