சீனாவின் ஹைகோ நகரில் நடைபெற்ற மின்சார வாகன கண்காட்சியில் ஓட்டுநரின்றி இயங்கும் வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. ஸ்டீயரிங் வீல் இல்லாத அந்த வாகனங்கள், செல்லும் வழியில் தடங்கல் வந்தால் தாமகவே பிரேக் அடித்து நின்றது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அதே போல், துளியும் கார்பன் வெளியிடாமல், தண்ணீரை மட்டுமே கழிவாக வெளியேற்றியபடி ஹைட்ரஜன் பேட்டரியில் இயங்கும் டிராக்டரும், 80 கிலோமீட்டர் வேகத்திலிருந்து 120 கிலோமீட்டர் வேகத்தை இரண்டே வினாடிகளில் எட்டக்கூடிய மோரிஸ் கராஜஸ் ரோட்ஸ்டர் ரக காரும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.