கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும் என மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்டது போல திடீர் அரசியல் திருப்பங்கள் கர்நாடகாவிலும் நிகழப் போவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், இந்த அரசியல் தலைகீழ் மாற்றமும் ஆட்சி கவிழ்வதும் கர்நாடகவில் எந்த நேரத்திலும் நடக்கலாம் என்று கூறிய குமாரசாமி, அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில் தத்துவம், சித்தாந்தம் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.