ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்குகளில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்பட 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இருவேறு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்த காஷ்மீர்அரசியல் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளன.