​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்காவில் புயல் மற்றும் சூறாவளியால் பெரும் சேதம்.. 6 பேர் உயிரிழப்பு; 20-க்கும் மேற்பட்டோர் காயம்

Published : Dec 10, 2023 4:56 PM

அமெரிக்காவில் புயல் மற்றும் சூறாவளியால் பெரும் சேதம்.. 6 பேர் உயிரிழப்பு; 20-க்கும் மேற்பட்டோர் காயம்

Dec 10, 2023 4:56 PM

அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் வீசிய புயல் மற்றும் சூறாவளியில் 6 பேர் உயிரிழந்தனர். இருபத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மேடிசன் பகுதியில் வீசிய சூறாவளியால் பல இடங்களில் மின்னல் தாக்கி பெரும் சேதம் ஏற்பட்டது. புயல் மற்றும் சூறாவளியால் ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்விநியோகம் தடைபட்டது.

இதனால், 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். புயல் மற்றும் சூறாவளியால் சாலைகள் சேதமடைந்துள்ளதாகவும், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கிளர்க்ஸ்வில்லி பகுதியில் பல வீடுகள் இடிந்தன. சாலைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதால் வெளியே செல்வதைத் தவிர்க்க அப்பகுதி மக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.