காங்கிரஸ் எம்பி தீரஜ் சாகுவின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்துள்ள கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அவரது வர்த்தகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
வருமான வரித்துறையினரால் எப்படி இவ்வளவு பெரிய தொகை கண்டு பிடிக்கப்பட்டது என தீரஜ்சாகு மட்டுமே விளக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, இரண்டு முறை மக்களவை தேர்தலில் தோல்வியடைந்த தீரஜ் சாகுவை மூன்று முறை மாநிலங்களவைக்கு அனுப்பியது ஏன் என்றும், இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மவுனம் சாதிப்பது ஏன் என்றும் பாஜக செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா கேள்வி எழுப்பி உள்ளார்.