சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் பணியாற்றும் வடமாநில பெண் ஒருவர், தன்னை பின்தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் மீது புகார் அளித்ததையடுத்து, அடையாளம் தெரியாத நபர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிசிடிவி பதிவுகளை கைப்பற்றிய போலீசார் சந்தேகத்துக்கிடமான அந்த நபரை கைது செய்யாததால், அதே நபர் மீண்டும் வந்து தொல்லை கொடுப்பதாக பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் பள்ளிக்கரணையை சேர்ந்த ரவுடி போல் தெரிவதாகவும், சிசிடிவி பதிவுகள் தெளிவாக இல்லாததால் விசாரணை தாமதப்படுவதாகவும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.