மிக்ஜாம் புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை பள்ளிக்கரணை சாய்பாலாஜி நகர் மக்கள், பல ஆண்டுகளாக உழைத்து சேமித்த பொருட்கள் வீணாகிவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
மழைவெள்ளம் வந்து தனது பாடபுத்தகங்கள் அனைத்தும் நனைந்து வீணாகிவிட்டதாகக் கூறிய மாணவி ஒருவர், திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் எனத் தெரிவிப்பதால், செய்வதறியாது தவிப்பதாகக் கூறினார்.