​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அடி ஒவ்வொண்ணும் அம்மி மாதிரி.. காத்து வாக்குல காதலிச்சா இப்படித்தான்.. இரு மனைவிகளின் கைகலப்பு காட்சிகள்..! திகைத்து நின்ற செல்போன் கடைக்காரர்..!

Published : Dec 03, 2023 6:29 AM

அடி ஒவ்வொண்ணும் அம்மி மாதிரி.. காத்து வாக்குல காதலிச்சா இப்படித்தான்.. இரு மனைவிகளின் கைகலப்பு காட்சிகள்..! திகைத்து நின்ற செல்போன் கடைக்காரர்..!

Dec 03, 2023 6:29 AM

வாணியம்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற செல்போன் கடைக்காரரின் முதல் மனைவியும், காதலியும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.  இருவருக்கு இடையேயான தாக்குதலை சமாளிக்க இயலாமல் செல்போன் கடைக்காரர் திணறிப்போனார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த செல்போன் கடைக்காரர் ஒருவர் வாணியம்பாடி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கபூராபாத் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் முன்விரோதம் காரணமாக தனது வீட்டை அடித்து உடைத்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சிசிடிவி ஆதாரங்களுடன் கூறியிருந்தார்.

யாரோ ஒரு பெண்ணுடன் செல்போன் கடைக்காரருக்கு அப்படி என்ன முன் விரோதம் என்று விசாரித்த போது, செல்போன் கடைக்காரர் காத்துவாக்குல காதலில் விழுந்த பெண்ணை கழட்டி விட்டது அம்பலமானது.

செல்போன் கடைக்காரருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த, 3 குழந்தைகளின் தாயான மற்றொரு பெண்ணை காதலித்த செல்போன் கடைக்காரர் கடந்த 3 ஆண்டுகளாக அவருடனும் தொடர்பில் இருந்துள்ளார். அப்பெண் செல்போன் கடைக்காரருக்கு பணம் மற்றும் வாகனங்கள் வாங்கிக் கொடுத்ததாக கூறப்படுகின்றது.

அண்மையில் தான் சேர்ந்து வாழ்ந்த காதலியின் தந்தை மரணம் அடைந்த பின்னர் அவரது வீட்டுக்கு செல்வதை தவிர்த்த செல்போன் கடைக்காரர், அவருடனான தொலைபேசி வழி தொடர்பையும் துண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பெண் , செல்போன் கடைக்காரரின் வீட்டிற்குச் சென்ற போது அவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டதால் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை கல்வீசி தாக்கி உடைத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து இருதரப்பினரையும் காவல் நிலையத்துக்கு வெளியே அனுப்பிய போது, சேர்ந்து வாழ்ந்த பெண்ணும் செல்போன் கடைக்காரரின் முதல் மனைவியும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனை தடுக்க இயலாமல் செல்போன் கடைக்காரர் திகைத்து நின்றார்.

போலீசார் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இருவரையும் விலக்கி விட்டனர்.

சேர்ந்து வாழ்ந்த பெண், காதலித்து குடும்பம் நடத்தி கைவிட்ட செல்போன் கடைக்காரரை திட்டியபடியே அங்கிருந்து சென்றார். குடும்ப பிரச்சனை என்பதால் இருதரப்பையும் பேசி தீர்த்துக் கொள்ள போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.