தேசிய பண்டிகைகளில் ஒன்றாக காசி தமிழ் சங்கமம் உருவாக வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.
காசி தமிழ் சங்கமம் 2.0 ஏற்பாடுகள் குறித்து ஆளுநர் மாளிகையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், காசிக்கும் தமிழக மக்களுக்கும் ஆயிரம் ஆண்டுகளாக இணைப்பு உள்ளது என்றார்.
ஆங்கிலேயர் வருகைக்குப் பின் மறக்கப்பட்ட அந்த இணைப்புகளை மீட்டு எடுக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், அந்த இணைப்பு நாட்டின் முதுகெலும்பு போன்றது என்றும் கூறினார்.
காசியில் மட்டும் இல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சங்கம நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் என்று குறிப்பிட்டார்.