கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தாண்டார்கோவில் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வயலில் நடவு பணி செய்வதற்காக நாற்றுக்கட்டுக்களை எடுத்து வைத்துக் கொண்டு இருந்த போது அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் இருந்து கத்தியுடன் வந்த நேபாள இளைஞரை பார்த்து பயந்து கூச்சலிட்ட நிலையில், அவரை மடக்கிப்பிடித்த இளைஞர்கள் கடுமையாக தாக்கி காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
மது போதையில் பெண்ணிடம் கத்தியை காண்பித்து மிரட்டியதாக காவல் நிலையத்தில் நேபாள இளைஞர் மீது புகார் அளிக்கப்பட்டது.
விசாரணையில் கூர்க்கா வேலை பார்க்கும் ரத்தன் பகதூர் போஸ்ரா என்ற அந்த இளைஞர், மது போதையில் தான் தங்கி இருக்கும் பகுதிக்கு செல்ல வழி தெரியாமல் கரும்பு காட்டுக்குள் புகுந்ததாகவும், அவரை தவறாக நினைத்து இளைஞர்கள் தாக்கியதாகவும் தெரியவந்தது.
இதையடுத்து கூர்க்கா மீது தாக்குதல் நடத்தியதாக 15 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்