இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் அதிகரித்து வரும் கடற்படை பலம் மற்றும் கடல்சார் களத்தில் பாகிஸ்தானுடனான அதன் ஒத்துழைப்பையும் எதிர்கொள்ள இந்தியா தனது திறன் மேம்பாட்டு திட்டங்களை தொடர்ந்து புதுப்பித்து வருவதாக கடற்படைத் தளபதி அட்மிரல் ஹரிகுமார் தெரிவித்துள்ளார்.
360 க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய கடற்படையை கொண்டுள்ள சீனா, எந்த நேரத்திலும் ஆறு முதல் எட்டு போர்க்கப்பல்களை இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிறுத்தி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.