புயலால் பாதிப்பிற்குள்ளாகக்கூடிய மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கி நிவாரண மையங்களில் தங்க வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் வருவாய், காவல், தீயணைப்புத்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கோண்டார். கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களின் ஆட்சியர்கள் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.
அதில் உரையாற்றிய முதலமைச்சர், அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், நிவாரண மையங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் சமையல் கூடங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.