மணிப்பூரில் வங்கிக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த முகமூடி அணிந்த கொள்ளை கூட்டம், 18 கோடியே 85 லட்ச ரூபாய் ரொக்கத்தை மூட்டைகளில் கட்டி அள்ளிச் சென்றது.
தலைநகர் இம்பாலில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உக்ரூல் என்ற இடத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியை பணம் வைக்கும் மையமாக ரிசர்வ் வங்கி பயன்படுத்தி வருகிறது.
இந்நிலையில், ராணுவ வீரர்கள் அணியும் சீருடை போன்ற ஆடை அணிந்து கொண்டு, வியாழன் மாலையில் வங்கியில் நுழைந்த 10 பேர் கொண்ட கும்பல், ஊழியர்களை தாக்கி கயிற்றால் கட்டி, கழிவறையில் வைத்து பூட்டியது.
பின்னர், வங்கி மேலாளரை துப்பாக்கியை தலையில் வைத்து மிரட்டி, லாக்கர் அறையை திறக்க சொல்லி, உள்ளே இருந்த பணக்கட்டுகளை மூட்டைகளில் கட்டி எடுத்து சென்றது. இதன் காட்சிகள் வங்கியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.