கடலூர் மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தராத ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்ப மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.
தூய்மை பணியாளர்களை ஆய்வு செய்யும் திட்டத்தில் ஆய்விற்கு வந்த மாவட்ட ஆட்சியரிடம் பணியாளர்கள் பல்வேறு புகார்களை தெரிவித்தனர்.
இதனையடுத்து, ஒரு வார காலத்திற்குள் குறைகளை தீர்க்க வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட ஆட்சியர், 15 நாட்களுக்குள் அடிப்படை வசதிகளை செய்து தராவிட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.