பயங்கரவாதத்துக்கு பயங்கரவாதம் மூலம் பதில் அளிக்க வேண்டாம் என இஸ்ரேல் அரசுக்கு போப் பிரான்சிஸ் அறிவுரை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் அதிபர் ஹெர்சாக் உடன் தொலை பேசியில் உரையாடிய போப் பயங்கரவாதத்திற்கு பயங்கரவாதத்துடன் பதிலளிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என்று கூறியதாக தி வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் தற்காப்புக்கு சமம் என்று ஹெர்சாக் பதிலளித்ததாக கூறப்படுகிறது.