திருவண்ணாமலை அருகே, அரசு அனுமதியில்லாத மதுபாரில் ஏற்பட்ட தகராறில் ஜேசிபி ஆபரேட்டர் பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த சரத், சதீஷ் ஆகியோர் அருகிலுள்ள ஒட்டகுடிசல் பகுதியில் அமைந்துள்ள அனுமதி இல்லா பாரில் மதுபானம் அருந்திய போது சத்தமாக பேசியதாக கூறப்படுகிறது.
அருகில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்த ஆடையூர், பகுதியைச் சேர்ந்த 4 பேர் இதனை கண்டித்ததால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஜேசிபி ஆபரேட்டரான தனது அண்ணன் சரவணனுக்கு செல்ஃபோன் மூலமாக சரத் தெரிவிக்கவே அவரும் அங்குச் சென்று தம்பிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
இதனால் மீண்டும் ஏற்பட்ட தகராறில் 4 பேர் கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் பீர் பாட்டிலால் சரமாரியாக குத்தியதில் சரவணனின் வயிற்று பகுதி கிழிந்து அதே இடத்தில் உயிரிழந்தார்.
காயமடைந்த மற்ற 2 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் போலீஸார் 3 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.