தெலங்கானா சட்டப்பேரவையில் 119 இடங்களுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மொத்தம் 2290 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், பாரத் ராஷ்ட்ர சமிதி, காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. 3
5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
ஜன்கோன் பகுதியில் பாஜக, காங்கிரஸ், பிஆர்எஸ் தொண்டர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. மற்றபடி மாநிலம் முழுவதும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மனைவியுடன் வந்து வாக்களித்தார். ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சித் தலைவர் ஷர்மிளா, ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் தேசிய கட்சிகளின் மாநிலத் தலைவர்கள் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும், சிரஞ்சீவி, நாகார்ஜுனா, வெங்கடேஷ், ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன், விஜய தேவரகொண்டா உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் வாக்களித்தனர்.