தெலுங்கானா மாநிலத்தில் 119 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
முன்பு எப்போதும் இல்லாத வகையில் இம்முறை காங்கிரஸ், பாஜக, பாரத ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு மொத்தம் 35 ஆயிரத்து 655 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், பதற்றத்துக்குரிய 12 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ் தெரிவித்துள்ளார்.
வீட்டிலிருந்து வாக்களிக்கும் திட்டத்தின் கீழ் ஏற்கனவே 27 ஆயிரம் பேர் வாக்குகளை செலுத்தி விட்டதாகவும் அவர் கூறினார். தெலங்கானா உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.