வேலையிழந்த உப்பளத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க தூத்துக்குடி தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படும் நிலையில் இத்தொழிலில் 50 ஆயிரம் பேர் வரையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
மழையால் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதால் மழைக்கால நிவாரணத் தொகையை 5 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதோடு, நலவாரிய பதிவை எளிதாக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.