கிரிக்கெட்டில் கபில் தேவ்வின் விக்கெட்டை வீழ்த்த 11 பேர் இணைந்து போராடினாலும், அதையும் மீறி கபில் தேவ் வெற்றி பெறுவதைபோன்று மாணவர்கள் தங்களது வாழ்வில் போராடி வெற்றி பெற வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி ரகுமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திண்டிவனம் அண்ணா அரசு பொறியியல் கல்லூரியில் சட்டப் பணிகள் குழுவின் சார்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார்.