​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வங்கக்கடலில் புயல் சின்னம்..? தமிழ்நாடு, புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

Published : Nov 28, 2023 6:18 AM

வங்கக்கடலில் புயல் சின்னம்..? தமிழ்நாடு, புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

Nov 28, 2023 6:18 AM

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், நேற்று உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணி நேரத்தில், வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் 5 நாட்களுக்கு, ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன், மழை பெய்யக்கூடும் என்றும், சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், ஒரு சில இடங்களில், இடி, மின்னலுடன், மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என, வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.