தெற்கு அந்தமான் கடலை ஒட்டி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக் கூடும் என்றும் இதன் காரணமாக, தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதற்கு அடுத்த 2 நாடகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளிலும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் எனவே ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 28-ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.