தற்காலத்தில் சாதாரண மக்களுக்கு நீதி கிடைப்பது விலை உயர்ந்ததாக உள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.
சென்னை பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் அரசியலமைப்பு தின நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், அரசியலமைப்பு சட்டம் தீண்டாமையை நீக்குவதாகவும், அனைவருக்குமான சமத்துவம் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்றார்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறி உள்ளதா என்பது குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் இது என்று குறிப்பிட்ட ஆளுநர், நீதிமன்றங்களில் மட்டும் இல்லாமல் சட்ட பல்கலைக்கழகங்களிலும் அரசியலமைப்பு சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என தெரிவித்தார்.
அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டதான் நோக்கத்தை நிறைவேற்றும் நேரம் இது என்றும் ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.