பெங்களூரில் ஹிந்துஸ்தான் உள்ள ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தை இன்று பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.
இந்நிறுவனம் 65 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சுகோய் 30 ஜெட் விமானங்களை மேம்படுத்தவும் இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட ஏராளமான போர் விமானங்களை கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் அங்கு நேரில் சென்று தயாரிப்பு வசதிகளை பிரதமர் பார்வையிட இருக்கிறார்.
ஹெலிகாப்டர் எஞ்சின்களை பிரெஞ்சு நிறுவனமான சஃப்ரானுடன் இணைந்து வடிவமைத்து மேம்படுத்தும் பணியை HAL தொடங்க உள்ளது.
மேலும் அமெரிக்காவில் GE ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து போர் விமான எஞ்சின்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.