நடிகை ரஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ தொடர்பான விசாரணையில் அதனைப் பரப்பியவர்கள் குறித்து சமூக ஊடகங்களால் எந்த ஒரு வலுவான ஆதாரத்தையும் தர முடியாததால் விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
குற்றம் செய்தவர்கள் ரஷ்மிகாவின் வீடியோக்களை தங்கள் பதிவுகளில் இருந்து நீக்கியிருப்பதால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை என்று கூறப்படுகிறது.
பெரும்பாலான கணக்குகள் FAKE ID மூலமாக செயல்பட்டு வந்ததாகவும் போலீசார் கூறுகின்றனர். போலீசாரிடம் சிக்கியுள்ள சிலரும் வீடியோவைப் பரப்பியதாக ஒப்புக் கொண்ட போதும் அதனை தாங்கள் உருவாக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
போலியான வீடியோக்கள் படங்கள் செய்திகள் பரவும் சமூக வலைதளங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.