சீனாவில் அதிவேகமாகப் பரவி வரும் நிமோனியா காய்ச்சல் கடல்தாண்டி மற்ற நாடுகளுக்கும் கோவிட் போல பரவலாம் என்று அச்சம் எழுந்துள்ளது.
குறிப்பாக பள்ளி மாணவர்களை தாக்கும் இந்த வகை வைரஸ் காய்ச்சலால் சீனாவின் சுகாதாரத் துறை பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது.
நோய்ப் பரவலுக்கான காரணங்கள் இன்னும் தெளிவாகவில்லை. அதே நேரத்தில் மற்ற நாடுகளிலும் இதன் பாதிப்புகள் தெரியத் தொடங்கியுள்ளன.
சீனாவிடம் இந்நோய்ப் பரவல் தொடர்பான அறிக்கையை அளிக்கும்படி உலக சுகாதார அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக குளிர்காலங்களில் இதுபோன்ற தொற்று நோய்கள் பரவும் என்றும் மக்கள் முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.