ஆந்திராவில் நடத்தும் நகைக் கடைக்கு நகைகள் வாங்குவதற்காக ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 2 கோடி ரூபாயை சென்னையில் போலீசார் பறிமுதல் செய்து வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
ஆந்திராவில் இருந்து மாதவரத்துக்கு பேருந்தில் வந்து இறங்கி, அங்கிருந்து யானைக் கவுனி நோக்கி ஆட்டோவில் சென்ற 3 பேர் பணம் பற்றி பேசிக் கொண்டதைக் கேட்டு ஆட்டோ ஓட்டுநர் கொடுத்த தகவலின் பேரில் சுற்றி வளைத்து பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.