கென்யா, சோமாலியா, எத்தியோப்பியா போன்ற கிழக்காப்ரிக்க நாடுகளில் பல மாதங்களாக கடும் வறட்சி நிலவி வந்த நிலையில், திடீரென பெய்துவரும் கனமழையால் பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
கென்யாவில் மட்டும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.
அங்குள்ள டானா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரை உடைந்ததால், அருகே வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிவருகின்றனர்.
எல்-நினோ என்றழைக்கப்படும் பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை அதிகரிப்பால், காலநிலை மாற்றம் ஏற்பட்டு திடீர் கனமழையும், வெள்ளமும் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.