​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
3 ஆண்டுகளுக்கு முன்பே முதியோர் உதவித் தொகைக்கு தேர்வான பெண்மணி... தேர்வானது தெரியாமல் மீண்டும் மீண்டும் மனு

Published : Nov 22, 2023 9:16 AM

3 ஆண்டுகளுக்கு முன்பே முதியோர் உதவித் தொகைக்கு தேர்வான பெண்மணி... தேர்வானது தெரியாமல் மீண்டும் மீண்டும் மனு

Nov 22, 2023 9:16 AM

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பே முதியோர் உதவித் தொகைக்கு தேர்வு செய்யப்பட்டது தெரியாமலேயே 95 வயதான பெண்மணி ஒருவர் மீண்டும் மீண்டும் மனு அளித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

சாத்தான்குளம் அருகே காமராஜர் நகரைச் சேர்ந்த தங்கம் என்ற வயதான பெண்மணி மூன்று வருடங்களுக்கு முன்பு முதியோர் உதவித் தொகை கேட்டு சாத்தான்குளம் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியருக்கு மனு செய்திருந்தார்.

இந்த நிலையில் அவர் மனு கொடுத்த மறு மாதத்தில் இருந்து கடந்த மே மாதம் வரை மாதந்தோறும் அவருக்கு 1000 ரூபாய் வங்கி கணக்கில் வந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த விவரம் தெரியாமல் அந்த பெண்மணி பலமுறை வட்டாட்சியர் அலுவலகம்  மற்றும் முக்கிய அரசு நிகழ்வுகளுக்கு சென்று தமக்கு முதியோர் உதவித்தொகை வேண்டும் என்று மனு அளித்து வந்துள்ளார். 

இந்த நிலையில் அவருடைய மகன் இரண்டு பேரும் வங்கிக்கு சென்ற போது அந்த பெண்மணிக்கு 3 வருடங்களாக முதியோர் உதவித்தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

மேலும் அந்த பணத்தை வங்கியில் இருந்து எடுக்காததால் மீண்டும் அந்த ரூபாய் அரசுக்கு ரீஃபண்ட் ஆகியுள்ளது என வங்கி கணக்கு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்மணி தமிழக அரசு தனது வங்கிக் கணக்கில் எடுத்த 36 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.