ஜி 20 தலைவர்கள் மாநாடு பிரதமர் மோடி தலைமையில் காணொளி வாயிலாக இன்று நடைபெறுகிறது.
டெல்லியில் செப்டம்பர் மாதத்தில் 18வது ஜி 20 மாநாடு நடத்தப்பட்ட போது உலகத் தலைவர்கள் முன்னிலையில், உலகம் எதிர்கொண்டுள்ள பல்வேறு பொருளாதார மற்றும் பேரிடர் சவால்களை ஒன்றுபட்டு சந்திக்கவும் இலக்கை நோக்கித் திட்டமிட்ட செயல்பாட்டுடன் இயங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டெல்லி தீர்மானம் என்று குறிப்பிடப்படும் அந்த தீர்மானத்தை அமல்படுத்துவதற்காக இன்றைய ஜி20 கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இம்மாதத்துடன் ஜி 20 கூட்டமைப்புக்குத் தலைமைப் பொறுப்பை இந்தியா நிறைவு செய்ய உள்ளது.