நேஷனல் ஹெரால்ட் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 752 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கி பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் அசோசியேட்ஸ் ஜர்னல்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்துக்கு நிதிமுறைகேடுகளில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து டெல்லி மும்பை மற்றும் லக்னோவில் உள்ள அதன் அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.