ராஜஸ்தானில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
தாராநகர் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், உலக அரசியலில் இந்தியா ஒரு முக்கியமான கட்டத்தின் உச்சத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
வளர்ச்சிப் பணிகளைத் தடுக்கும் காங்கிரசுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது என்று பேசிய மோடி, ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியினர் கிரிக்கெட் டீமைப் போல செயல்பட்டு வருவதாகவும், அதன் பேட்ஸ்மேன்கள் ஒருவரையொருவர் ரன் அவுட் செய்யவே முயற்சி செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் ஆட்சியில், கடவுளின் பெயரை உச்சரிப்பது கூட கடினமாகிவிட்டதாகக் குறிப்பிட்ட மோடி, ஊழல் செய்த அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று உறுதியளித்தார்.