​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எக்ஸ்பிரஸ் ரயிலின் ரிசர்வேஷன் பெட்டியில் பதிவு செய்யாத பயணிகள் அதிகளவில் பயணம் செய்ததால் பெண் பயணிகள் இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் அவதி

Published : Nov 20, 2023 7:07 AM

எக்ஸ்பிரஸ் ரயிலின் ரிசர்வேஷன் பெட்டியில் பதிவு செய்யாத பயணிகள் அதிகளவில் பயணம் செய்ததால் பெண் பயணிகள் இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் அவதி

Nov 20, 2023 7:07 AM

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலின் ரிசர்வேஷன் பெட்டியில் பதிவு செய்யாத பயணிகள் அதிகளவில் பயணம் செய்ததால் பெண் பயணிகள் இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

கொச்சிவெலியில் இருந்து கோரக்பூர் வரை செல்லும் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த ரயிலில் விஜயவாடா செல்வதற்காக சதீஷ்குமார் என்பவர் தனது சகோதரியுடன் கோவையில் ஏறியுள்ளார்.

ஆனால் அந்த பெட்டியில் முன்பதிவு செய்யாத பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்களால் கழிவறைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் அந்த ரயிலின் அபாயச் சங்கலியை பிடித்து இழுத்து சதீஷ்குமார் ரயிலை நிறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அங்கு வந்த ரயில்வே போலீசாரிடம் சதீஷ்குமார் நிலைமையை விளக்கி கூறவே அவர்கள் அந்த பெட்டியில் இருந்து பதிவு செய்யாத பயணிகளை கீழே இறக்கினர். இதன் காரணமாக அந்த ரயில் அங்கிருந்து 15 நிமிடம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.