மசோதாக்களை ஆளுநர்கள் தாமதப்படுத்துவதற்கு எதிராக தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசுகள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு இன்று விசாரிக்கிறது.
ஆளுநர் ரவியால் திருப்பி அனுப்பட்ட மசோதாக்களை, தமிழ்நாடு அரசு சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்தி மீண்டும் நிறைவேற்றியது. இது குறித்த விளக்கத்தை தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளது.
இதே போன்று கேரள ஆளுநர் முகமது ஆரிப் மசோதாக்களை 2 ஆண்டுகளாக தாமதித்து வருவதாக அந்த மாநில அரசு மனுவிவில் தெரிவித்து இருக்கிறது. இதனிடையே மேற்கு வங்க அரசும் அம்மாநில ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது