உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ளவர்களை, இயந்திரங்கள் பழுதாகாமல் செயல்படும் பட்சத்தில் மூன்று நாட்களுக்குள் மீட்க முடியும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
எட்டு நாள்களாக சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்க நடைபெற்று வரும் பணிகளை நிதின் கட்கரியும், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியும் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதின் கட்கரி, இப்போதைக்கு உள்ளே சிக்கியிருக்கும் 41 பேரையும் உயிருடன் வைத்திருக்க வேண்டும் என்பதற்கே முன்னுரிமை கொடுத்து பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
மீட்புப் பணியில் பாறைகளைத் துளையிடும் இரண்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், மேலும் சில நவீன இயந்திரங்கள் கொண்டுவரப்பட உள்ளதாகவும் கூறினார்.